காரில் கடத்தப்பட்ட 2,500 மதுபாட்டில்கள் பறிமுதல் 2 பேர் கைது


காரில் கடத்தப்பட்ட 2,500 மதுபாட்டில்கள் பறிமுதல் 2 பேர் கைது
x
தினத்தந்தி 27 Feb 2020 5:00 AM IST (Updated: 27 Feb 2020 12:57 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே காரில் கடத்தப்பட்ட 2,500 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக 2 பேரை கைது செய்து உள்ளனர்.

குத்தாலம்,

மயிலாடுதுறை அருகே பெரம்பூர் போலீஸ் சரகம் கொடவிளாகம் மெயின்ரோட்டில் தனிப்படை பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபுராஜா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் மதுபாட்டில்களை கடத்தி சென்றது தெரியவந்தது. உடனே போலீசார், மதுபாட்டில்களுடன் காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து விற்பனைக்காக 2 ஆயிரத்து 500 மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

2 பேர் கைது

மேலும் கார் டிரைவர் மயிலாடுதுறை அருகே கோடங்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மகேந்திரன் (வயது 37) என்பதும், கார் உரிமையாளர் கோடங்குடி சோலையாம்பட்டினத்தை சேர்ந்த மகாலிங்கம் மகன் ஜெயானந்தன் (31) என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேந்திரன், ஜெயானந்தன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Next Story