ஸ்ரீமு‌‌ஷ்ணம் அருகே, தூக்கில் பிணமாக தொங்கிய தொழிலாளி - போலீஸ் விசாரணை


ஸ்ரீமு‌‌ஷ்ணம் அருகே, தூக்கில் பிணமாக தொங்கிய தொழிலாளி - போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 27 Feb 2020 3:30 AM IST (Updated: 27 Feb 2020 1:08 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீமுஷ்ணம் அருகே தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் தொழிலாளி ஒருவர் கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீமு‌‌ஷ்ணம், 

ஸ்ரீமு‌‌ஷ்ணம் அருகே உள்ள தேத்தாம்பட்டு ஊராட்சி வெங்கிடுசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிரு‌‌ஷ்ணன் (வயது 48). கூலி தொழிலாளி. இவரது தம்பி முத்துகிரு‌‌ஷ்ணன் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். அவருக்கு நேற்று கரும காரியங்கள் நடைபெற இருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற பாலகிரு‌‌ஷ்ணன், இரவு வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இந்த நிலையில், ஸ்ரீஆதிவராக நல்லூர் செல்லும் வழியில் பெலாந்துறை வாய்க்கால் அருகில் புளியமரத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தார். இதுபற்றி தகவலறிந்த ஸ்ரீமு‌‌ஷ்ணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், ஸ்ரீமு‌‌ஷ்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனது தம்பியின் மரணத்தால் மனமுடைந்து பாலகிரு‌‌ஷ்ணன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த பாலகிரு‌‌ஷ்ணனுக்கு லதா (37) என்ற மனைவியும் பாலாஜி (17) பூபாலன் (16) என்று 2 மகன்கள் உள்ளனர்.

Next Story