ஊரப்பாக்கத்தில் என்ஜினீயர் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு
ஊரப்பாக்கத்தில் என்ஜினீயர் வீட்டில் 15 பவுன் நகை திருடப்பட்டது.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் மாமன்னர் அசோகர் சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ஜெனித்ராஜ் (வயது 30), இவர் சென்னையில் உள்ள பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் இவரும் இவரது மனைவியும் வீட்டை பூட்டிக் கொண்டு வேலைக்கு சென்றுவிட்டனர். பின்னர் மாலை வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
நகை திருட்டு
உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகை திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து ஜெனித்ராஜ் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story