புதிதாக கட்டப்படும் கட்டிடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் கட்டாயமாக்கப்படும் மந்திரி அனில்தேஷ்முக் அறிவிப்பு


புதிதாக கட்டப்படும்  கட்டிடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் கட்டாயமாக்கப்படும்   மந்திரி அனில்தேஷ்முக் அறிவிப்பு
x
தினத்தந்தி 27 Feb 2020 4:55 AM IST (Updated: 27 Feb 2020 4:55 AM IST)
t-max-icont-min-icon

புதிதாக கட்டப்படும் கட்டிடங்களில் கண் காணிப்பு கேமராக்கள் கட்டாயமாக்கப்படும் என்று உள்துறை மந்திரி அனில்தேஷ்முக் தெரிவித்தார்.

மும்பை,

மராட்டியத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக சட்டசபை மற்றும் மேல்-சபையில் கடந்த 2 நாட்களாக பாரதீய ஜனதா அமளியில் ஈடுபட்டது.

இந்த நிலையில் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையாக மாநிலத்தில் புதிதாக கட்டப்படும் கட்டிடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது கட்டாயமாக்கப்படும் என்று உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் அறிவித்தார்.

இது தொடர்பாக நேற்று அவர் மேல்-சபையில் பேசியதாவது:-

மும்பையில்...

நாங்கள் தற்போதைய விதிகளை திருத்தி, மாநிலத்தில் கட்டப்படும் ஒவ்வொரு புதிய கட்டிடத்திலும் கண் காணிப்பு கேமராக்களை பொருத்துவதை கட்டாயமாக்குவோம். இதுதவிர கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் மாநில உள்துறையின் குற்றம் மற்றும் குற்ற கண்காணிப்பு நெட்வொர்க் அமைப்புடன் இணைக்கப்படும். மும்பையின் பாதுகாப்புக்காக கூடுதலாக 5 ஆயிரம் கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story