சாயர்புரம் அருகே குளத்தில் மூழ்கி அண்ணன்–தம்பி பலி மீன்பிடிக்க சென்றபோது பரிதாபம்
சாயர்புரம் அருகே மீன்பிடிக்க சென்ற அண்ணன், தம்பி 2 பேரும் குளத்தில் மூழ்கி உயிர் இழந்தனர்.
சாயர்புரம்,
சாயர்புரம் அருகே மீன்பிடிக்க சென்ற அண்ணன், தம்பி 2 பேரும் குளத்தில் மூழ்கி உயிர் இழந்தனர்.
அண்ணன்–தம்பி
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே சேர்வைக்காரன்மடம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சக்கம்மாள்புரத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 45). இவரின் மனைவி சந்திரா (40). இவர்களுக்கு இசக்கிமுத்து (9), மாரிச்செல்வம் (7) என்ற 2 மகன்கள் உள்ளனர். பிரபாகரன் குடும்பத்துடன் சென்னை துரைப்பாக்கத்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் மளிகை கடை வைத்து உள்ளார். அங்கு உள்ள பள்ளியில் இசக்கிமுத்து 4–ம் வகுப்பும், மாரிச்செல்வம் 2–ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்த நிலையில் புதுக்கோட்டையில் நடந்த உறவினர் வீட்டு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக பிரபாகரன் தனது குடும்பத்துடன் சொந்த ஊரான சக்கம்மாள்புரத்துக்கு வந்தனர்.
மீன்பிடிக்க....
மாலையில் இசக்கிமுத்து, மாரிச்செல்வம் ஆகியோர், சக்கம்மாள்புரம் அருகில் உள்ள குளத்தில் மீன் பிடிக்க சென்றனர். ஆனால் வெகுநேரமாகியும் அவர்கள் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனையடுத்து உறவினர்கள் சிறுவர்களை தேடி சென்றனர்.
அங்கு குளத்தின் கரையில் சிறுவர்களின் உடை, செருப்பு ஆகியவை இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், குளத்தில் இறங்கி தேடி பார்த்தனர். அப்போது சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிர் இழந்தது தெரியவந்தது. தண்ணீரில் இருந்து சிறுவர்களின் உடல்கள் வெளியே எடுக்கப்பட்டன.
தகவல் அறிந்த சாயர்புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் உடல்கள் கைப்பற்றப்பட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து சாயர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story