மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் ; ஜி.சம்பத் எம்.எல்.ஏ. வழங்கினார்
சோளிங்கர் அருகே மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் ஜி.சம்பத் எம்.எல்.ஏ. வழங்கினார்.
சோளிங்கர்,
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த நீலகண்டராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ–மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க துணைத்தலைவர் எஸ்.ஜெகநாதன் தலைமை தாங்கினார்.
சோளிங்கர் முன்னாள் பேரூராட்சி தலைவர் ஏ.எல்.விஜயன், வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர்கள் ஜம்புகுளம் பெல்.கார்த்திகேயன், தலங்கை, குப்பன், சோளிங்கர் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.நரசிம்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கணேசன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக ஜி.சம்பத் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு 62 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை பாரதி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story