தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு


தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
x
தினத்தந்தி 28 Feb 2020 3:30 AM IST (Updated: 27 Feb 2020 6:29 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 3 மின் உற்பத்தி எந்திரங்கள் இயங்காததால், 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 3 மின் உற்பத்தி எந்திரங்கள் இயங்காததால், 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

அனல் மின்நிலையம் 

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி எந்திரங்கள் இயங்கி வருகின்றன. சுமார் 40 ஆண்டுகள் பழமையான மின் உற்பத்தி எந்திரங்கள் மூலம் மின்உற்பத்தி நடந்து வருகிறது.

இங்கு உள்ள 5–வது மின் உற்பத்தி எந்திரம் டர்பைன் பராமரிப்புக்காக சில மாதங்களாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் மற்ற 4 மின் உற்பத்தி எந்திரங்கள் மூலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதன் முழு திறனான 840 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

பழுது 

நேற்று முன்தினம் 3–வது மின் உற்பத்தி எந்திரத்தில் உள்ள கொதிகலனில் திடீர் ஓட்டை விழுந்தது. இதனால் 3–வது மின் உற்பத்தி எந்திரம் நிறுத்தப்பட்டது. அதில் பழுது நீக்கும் பணி நடந்து வருகிறது.

நேற்று அதிகாலையில் 1–வது மின்சார உற்பத்தி எந்திரத்தில் நிலக்கரி எரியும் பகுதியில் அதிக அளவில் சாம்பல் கட்டிகளாக தேங்கியதால், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 1–வது மின்உற்பத்தி எந்திரம் நிறுத்தப்பட்டது.

மின் உற்பத்தி பாதிப்பு 

இதனால் 2 மற்றும் 4–வது மின் உற்பத்தி எந்திரங்கள் மட்டும் இயங்கி வருகின்றன. மொத்தம் 3 எந்திரங்கள் இயங்காததால், 630 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. பழுதடைந்த எந்திரங்களை விரைந்து பழுது நீக்கி இயக்குவதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.

Next Story