கூடங்குளம் பகுதியில் ஆடு திருட்டு வழக்கில் 2 பேர் கைது
நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியில் அடிக்கடி ஆடு திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தன.
கூடங்குளம்,
கூடங்குளம் பகுதியில் ஆடு திருட்டு வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆடுகள் திருட்டு
நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியில் அடிக்கடி ஆடு திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தன. இதுதொடர்பாக கூடங்குளம் போலீஸ் நிலையத்துக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதா உத்தரவின்படி, சப்–இன்ஸ்பெக்டர் அய்யனார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
2 பேர் கைது
விசாரணையில், கூடங்குளம் அருகே உள்ள இருக்கன்துறை புத்தேரியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 37) ஆடுகளை திருடியதும், திருடப்பட்ட ஆடுகளை குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மறவன்குடியிருப்பை சேர்ந்த பெபின் ஜோஸ் (38) வாங்கியதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலகிருஷ்ணன், பெபின் ஜோஸ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் ஆடு திருடுவதற்கு குமரி மாவட்டம் கொட்டாரம் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சேதேஷ்குமார் என்ற அய்யப்பன், சிவராஜன் மகன் பிரசாந்த் ஆகியோர் உதவியாக இருந்ததும் தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கைதானவர்களிடம் இருந்து 73 வெள்ளாடுகள் மற்றும் ஆடுகள் திருட பயன்படுத்தப்பட்ட 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story