மக்கள் தொடர்பு திட்ட முகாம்
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம் (வடக்கு) கவரப்பாளையம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.
வரதராஜன்பேட்டை,
மக்கள் தொடர்பு திட்ட முகாமிற்கு மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி தலைமை தாங்கினார். முகாமில் வருவாய் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 36 பேருக்கு நலத்திட்ட உதவிகளும், 35 பேருக்கு நத்தம் பட்டாவும், 19 பேருக்கு வீட்டுமனை பட்டாவும், 8 பேருக்கு நிலப்பட்டா மாற்றமும், வேளாண்மைத்துறை சார்பில் 5 பேருக்கு மழைநீர் தெளிப்பான் கருவிகளும், தோட்டக்கலைத்துறை சார்பில் 2 பேருக்கு தெளிப்பு பாசன பணி ஆணையும் என மொத்தம் 105 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 53 ஆயிரத்து 644 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
முன்னதாக உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பூங்கோதை வரவேற்றார். இந்த முகாமில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஏழுமலை, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் உமாசங்கர், மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆண்டிமடம் வட்டாட்சியர் குமரய்யா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story