புதுடெல்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று பிரதமரும், உள்துறை மந்திரியும் பதவி விலக வேண்டும் திருமாவளவன் பேட்டி


புதுடெல்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று பிரதமரும், உள்துறை மந்திரியும் பதவி விலக வேண்டும் திருமாவளவன் பேட்டி
x
தினத்தந்தி 28 Feb 2020 3:45 AM IST (Updated: 27 Feb 2020 8:51 PM IST)
t-max-icont-min-icon

புதுடெல்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று பிரதமரும், உள்துறை மந்திரியும் பதவி விலக வேண்டும்.

தூத்துக்குடி, 

புதுடெல்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று பிரதமரும், உள்துறை மந்திரியும் பதவி விலக வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அவர் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார்.

அங்கு விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது கூறியதாவது:–

வரவேற்பு 

புதுடெல்லியில் நடந்த கலவரத்துக்கு உளவுத் துறையின் அலட்சியப் போக்கே காரணம் என நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், முழுக்க முழுக்க அதிகாரிகள் தவறு செய்வது போல் சொல்வது தவறு. பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் இந்த கலவரம் நடந்து உள்ளது.

பதவி விலக வேண்டும் 

இந்த கலவரத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் பதவி விலக வேண்டும். அதை வலியுறுத்தி சென்னையில் மார்ச் 1–ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. இதில், அரசியல் தலையீடு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story