தூத்துக்குடியில் காய்கனி மார்க்கெட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை


தூத்துக்குடியில் காய்கனி மார்க்கெட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
x
தினத்தந்தி 28 Feb 2020 4:00 AM IST (Updated: 27 Feb 2020 9:13 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி காய்கனி மார்க்கெட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி காய்கனி மார்க்கெட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

சோதனை 

தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் காமராஜர் காய்கனி மார்க்கெட் அமைந்து உள்ளது. இந்த மார்க்கெட் தலைவராக சி.த.சுந்தரபாண்டியன் உள்ளார். இந்த மார்க்கெட் அலுவலகத்துக்கு மதுரையை சேர்ந்த வருமானவரித்துறை அலுவலர்கள் நேற்று காலையில் 6 குழுவாக வந்தனர். இதில் 2 குழுவினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மார்க்கெட் அலுவலகத்துக்குள் சென்றனர். அங்கு இருந்த பணியாளர்கள் வெளியில் செல்ல தடை விதித்தனர். டெலிபோன் சேவையையும் முடக்கினர். தொடர்ந்து அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மார்க்கெட்டில் எத்தனை கடைகள் உள்ளன. அதில் தினமும் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களையும் சேகரித்தனர். இந்த சோதனை நேற்று இரவு வரை நீடித்தது.

வெறிச்சோடியது 

இந்த திடீர் சோதனை காரணமாக மார்க்கெட்டில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் மார்க்கெட் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. இதே போன்று தூத்துக்குடியில் சுந்தரபாண்டியன் வீடு, மார்க்கெட்டுடன் இணைந்த விடுதி, ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சோதனை நடத்தினர்.

Next Story