சேலத்தில் மண்டல விளையாட்டு போட்டி 270 மாணவர்கள் பங்கேற்பு
சேலத்தில் நடந்த மண்டல அளவிலான விளையாட்டு போட்டியில் 270 மாணவர்கள் பங்கேற்றனர்.
சேலம்,
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் சேலம் மண்டல அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு இடையேயான மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி சேலம் மகாத்மாகாந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது.
இந்த போட்டியை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார். இதில் கால்பந்து, கைப்பந்து, பேட்மிண்டன், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
270 மாணவர்கள் பங்கேற்பு
இதில் சேலம் மண்டலத்துக்குட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 8 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இருந்து 270 மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் ராமன் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். இன்று(வெள்ளிக்கிழமை) 100, 400, 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் மாணவ, மாணவிகளுக்கு நடைபெறுகிறது.
குழு போட்டிகளில் முதலிடம் பிடிக்கும் அணிகளும், தடகள போட்டிகளில் முதலிடம் பிடிக்கும் மாணவ, மாணவிகளும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story