திருவள்ளூர் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது


திருவள்ளூர் அருகே   பொதுமக்களுக்கு இடையூறாக கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 28 Feb 2020 4:00 AM IST (Updated: 28 Feb 2020 1:26 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக கத்தியை காட்டி மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு சப்-இன்ஸ்பெக்டர் தீபன்ராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூரை அடுத்த கோலப்பஞ்சேரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அங்கிருந்த 2 பேர் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலையில் ஆபாசமாக பேசி கத்தியுடன் ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த போலீசாரை கண்டதும், அவர்கள் ஓட்டம் பிடித்தனர். இதைபார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அந்த நபர்களை பிடிக்க முயன்றனர்.

2 பேர் கைது

அப்போது நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்த னர். தொடர்ந்து போலீசார் 2 பேரையும் மடக்கி பிடித்து அவர்களை கைது செய்த னர். பின்பு விசாரணையில் அவர்கள் ஆனந்தகுமார் (வயது 25), தேவேந்திரன் (30) என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து வெள்ளவேடு போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story