ஊத்துக்கோட்டை அருகே மனைவியை கொன்று நாடகமாடிய கணவன் கைது


ஊத்துக்கோட்டை அருகே   மனைவியை கொன்று நாடகமாடிய கணவன் கைது
x
தினத்தந்தி 28 Feb 2020 4:30 AM IST (Updated: 28 Feb 2020 1:29 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டை அருகே மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு மயங்கி விழுந்ததாக நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர்.

ஊத்துக்கோட்டை, 

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கண்ணன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் வாசு (வயது 30). வேன் டிரைவர். சித்தூர் மாவட்டம் சத்தியவேடு அருகே உள்ள நரசராஜூஅக்கிரகாரம் கிராமத்தை சேர்ந்தவர் ஹேமபூ‌‌ஷணம். விவசாயி. இவரது மகள் ஆர்த்தி (25). இவர் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

வாசு ஓட்டி செல்லும் வேனில் ஆர்த்தி தினமும் வேலைக்கு செல்வது வழக்கம். இப்படி செல்லும் போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது. 2 ஆண்டுகளுக்கு முன்பு வாசுவும், ஆர்த்தியும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் வாசு குடிப்பழக்கத்துக்கு அடிமையானதாக தெரிகிறது. இதனால் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். இதை ஆர்த்தி கண்டித்து வந்தார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.

கழுத்தை நெரித்து கொலை

கடந்த மாதம் 11-ந் தேதி இரவு வாசு எப்போதும் போல குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதை ஆர்த்தி கண்டித்தார். ஆத்திரம் அடைந்த வாசு தன் மனைவியை அடித்து உதைத்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மயங்கி விழுந்ததாக நாடகமாடிய வாசு, தன் மனைவியின் உடலை சத்தியவேடு அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றார்.

ஆர்த்தியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுதொடர்பாக சத்தியவேடு போலீசார் சந்தேக மரணம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கணவன் கைது

இந்தநிலையில் கடந்த மாதம் 23-ந் தேதி டாக்டர்கள் ஆர்த்தியின் பிரேத பரிசோதனை அறிக்கை அளித்தனர். அதில் ஆர்த்தி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார் என்று விளக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர் வாசு தப்பி ஓடிவிட்டார். நேற்று காலை அவரை சத்தியவேடு சப்-இன்ஸ்பெக்டர் நாகார்ஜூனரெட்டி தலைமையிலான போலீசார் கைது செய்து செய்தனர்.

Next Story