விசாரணை கைதி தப்பியோடிய விவகாரம் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் பணி இடைநீக்கம்
பிடிபட்ட விசாரணை கைதி தப்பியோடிய விவகாரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
மும்பை,
மும்பையில் நடந்த ஒரு மோசடி வழக்கில் தொடர்புடைய மனோஜ் சிங் என்பவர் வாரணாசியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் பொருளாதார குற்றப்பிரிவை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கஜானன், போலீஸ்காரர்கள் ராம்பாபு, அனில் மகாஜன், பாலு மகாஜன், சந்தீப் ஷிண்டே, அவினாஷ் நாக்ரே ஆகியோர் அடங்கிய குழு கடந்த 9-ந் தேதி வாரணாசி சென்று மனோஜ் சிங்கை கைது செய்தனர்.
இதையடுத்து மறுநாள் அவரை ரெயிலில் அழைத்து வருவதற்காக போலீசார் அங்கு தங்கி இருந்தனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மனோஜ் சிங் தனது வீட்டில் நிகழ்ச்சி ஒன்று இருப்பதாகவும், அதில் கலந்து கொள்ள அனுமதி தரும்படி கேட்டு்க்கொண்டார்.
பணி இடைநீக்கம்
இதற்கு அனுமதி வழங்கிய போலீசார், மனோஜ் சிங் மற்றும் அவரது பாதுகாப்பிற்காக 3 போலீசாருடன் அசாம்காட் என்ற இடத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சென்ற மனோஜ் சிங் போலீசாரின் பிடியில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் அவர் மீது அங்குள்ள போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விசாரணை கைதி தப்பி சென்ற விவகாரம் மும்பை உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனை தொடர்ந்து பிடிபட்ட விசாரணை கைதிக்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்கிய சப்-இன்ஸ்பெக்டர் கஜானன் உள்பட 6 போலீசாரை பணி இடைநீக்கம் செய்து கமிஷனர் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story