வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் தயார்; கருத்துகள் தெரிவிக்க 2–ந் தேதி கடைசி நாள்


வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் தயார்; கருத்துகள் தெரிவிக்க 2–ந் தேதி கடைசி நாள்
x
தினத்தந்தி 29 Feb 2020 3:45 AM IST (Updated: 28 Feb 2020 6:03 PM IST)
t-max-icont-min-icon

நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி திருவண்ணாமலை மாவட்ட நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் தயார் செய்யப்பட்டு கடந்த 26–ந் தேதி முதல் சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை, 

வரைவு வாக்குச்சாவடி பட்டியல்களை பொதுமக்கள், கட்சி பிரதிநிதிகள் பார்வையிட்டு தங்கள் கருத்துக்களை அல்லது மறுப்புகளை தேர்தல் நடத்தும் அலுவலரிடமோ அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகத்திலோ வருகிற 2–ந் தேதிக்குள் தெரிவிக்கலாம்.

இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

Next Story