தூத்துக்குடியில் லாரி–மோட்டார் சைக்கிள் மோதல்; அனல்மின் நிலைய ஊழியர் சாவு


தூத்துக்குடியில் லாரி–மோட்டார் சைக்கிள் மோதல்; அனல்மின் நிலைய ஊழியர் சாவு
x
தினத்தந்தி 29 Feb 2020 3:30 AM IST (Updated: 28 Feb 2020 6:42 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் அனல் மின்நிலைய ஊழியர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் அனல் மின்நிலைய ஊழியர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

வெல்டர் 

தூத்துக்குடி தெற்கு வீரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் ராமசந்திரன். இவரின் மகன் ராஜகுரு (வயது 40). வெல்டர். இவர் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு சியாமளா(35) என்ற மனைவியும், 6 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு ராஜகுரு வேலையை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் தெற்கு வீரபாண்டியபுரத்துக்கு புறப்பட்டார். தூத்துக்குடி– மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் ஆலை அருகே உள்ள ரெயில்வே மேம்பாலம் அருகே அவர் சென்று கொண்டு இருந்தார்.

சாவு 

அப்போது அவரது பின்னால் ஒரு லாரி வந்து கொண்டு இருந்தது. திடீரென அந்த லாரி ராஜகுரு ஓட்டிசென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜகுரு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்நது போலீசார் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரான தூத்துக்குடி கீழகூட்டுடன்காடை சேர்ந்த செல்லத்துரை (32) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story