சுப்பையார் குளத்தை தூர்வார வேண்டும்; கலெக்டர் அலுவலகத்தில் மனு


சுப்பையார் குளத்தை தூர்வார வேண்டும்;  கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 29 Feb 2020 3:15 AM IST (Updated: 28 Feb 2020 6:49 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்ட நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்க தலைவர் ராஜா தலைமையில் நிர்வாகிகள் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர்.

நாகர்கோவில், 

"நாகர்கோவில் வடசேரி புதுக்குடியிருப்பில் சுப்பையார் குளம் உள்ளது. இந்த குளத்தில் கழிவுநீர் கலக்கிறது. செடி–கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. எனவே குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடை செய்து செடி, கொடிகளை அகற்றி தூர்வாருவதோடு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story