புளியந்தோப்பில் 7 நாட்களாக நடந்த முஸ்லிம்கள் போராட்டம் வாபஸ் போலீசாரின் வேண்டுகோளை ஏற்று கலைந்து சென்றனர்
புளியந்தோப்பில் போலீசாரின் வேண்டுகோளை ஏற்று 7 நாட்களாக நடைபெற்ற போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
திரு.வி.க. நகர்,
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை வண்ணாரப்பேட்டையை தொடர்ந்து புளியந்தோப்பு டிகாஸ்டர் சாலையிலும் திரளான முஸ்லிம்கள் கடந்த 22-ந்தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று 7-வது நாளாக அவர்களின் போராட்டம் தொடர்ந்தது.
இதையடுத்து இணை கமிஷனர் விஜயகுமாரி, துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா, உதவி கமிஷனர்கள் ஜெய்சிங் மற்றும் முத்துக்குமார், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குறுகலான சாலையில் போராட்டம் நடத்துவதால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் நலன் கருதி போராட்டத்தை கைவிடுமாறும் போலீசார் கேட்டுக் கொண்டனர்.
நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு போலீசாரின் வேண்டுகோளை ஏற்று 7 நாட்களாக நடைபெற்ற போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்ட போராட்டக்காரர்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கடந்த 7 நாட்களாக பரபரப்பாக காணப்பட்ட புளியந்தோப்பு டிகாஸ்டர் சாலை நேற்று மாலை முதல் இயல்பு நிலைக்கு திரும்பியது.
Related Tags :
Next Story