ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிக்காக பஸ் நிலைய கட்டிடத்தை இடித்தபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிக்காக பஸ் நிலைய கட்டிடத்தை இடித்தபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.
தஞ்சாவூர்,
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சை பழைய பஸ் நிலையம், திருவையாறு மார்க்கத்தில் செல்லும் பஸ்கள் நிற்கக்கூடிய பஸ் நிலையம், சிவகங்கை பூங்கா, காமராஜ் மார்க்கெட், சரபோஜி மார்க்கெட் உள்ளிட்ட 14 இடங்களில் ரூ.904 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது..
தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடங்கள் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் திருவையாறு மார்க்கமாக செல்லும் பஸ்கள் நிற்கக்கூடிய பஸ் நிலையத்தில் உள்ள பழைய கட்டிடங்கள் இடிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சையை அடுத்த மாரியம்மன்கோவில் அருகே பிராந்தை கிராமத்தை சேர்ந்த சரவணன்(வயது 38) என்பவர் கட்டிடத்தை இடிக்கும் பணியில் நேற்று ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்கம்பி மீது அவரது கை பட்டது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரவணன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story