சொத்து தகராறில், சித்தியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை


சொத்து தகராறில், சித்தியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 28 Feb 2020 10:00 PM GMT (Updated: 29 Feb 2020 12:51 AM GMT)

சொத்து தகராறில் சித்தியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

திருச்சி,

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வடக்குசேர்பட்டியை சேர்ந்த சிவசாமி மகன் சரவணகுமார் (வயது36). இவரது சித்தி ராதா (வயது 60), இவருக்கும், சரவணகுமாருக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 20-6-2017 அன்று ராதா திருச்சியை அடுத்த பூலாங்குளத்து பட்டியில் உள்ள தனது வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த சரவணகுமார் தனக்குரிய சொத்தை பிரித்து தருமாறு கேட்டு தகராறு செய்தார். பின்னர் அரிவாளால் அவரது தலையில் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த ராதா தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி கடந்த 1-7-2017 அன்று இறந்தார்.

இதனையொட்டி இனாம்குளத்தூர் போலீசார் சரவணகுமாரை கைது செய்து திருச்சி 3-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி கர்ணன் விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட சரவணகுமாருக்கு சிறைத்தண்டனையும், ரூ.500 அபராதமும் அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் கடுங்காவல் சிறைத்தண்டனையும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

Next Story