நெல்லையில் சுட்டெரிக்கும் கோடை வெயில் பொதுமக்கள் கடும் அவதி


நெல்லையில் சுட்டெரிக்கும் கோடை வெயில்  பொதுமக்கள் கடும் அவதி
x
தினத்தந்தி 1 March 2020 3:00 AM IST (Updated: 29 Feb 2020 9:51 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

நெல்லை, 

நெல்லையில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

வெயில் அதிகம் 

நெல்லை மாவட்டத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தியது. இதனால் பாபநாசம், சேர்வலாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் மள, மளவென்று குறைந்து வருகிறது.

இந்த நிலையில் நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து கொண்டே செல்கிறது. நெல்லையில் வெயிலின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. நெல்லையில் நேற்று அதிகபட்சமாக 95 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. அதாவது ஏப்ரல், மே மாதங்களில் அடிக்கின்ற வெயிலை போல் இருந்தது.

பொது மக்கள் அவதி 

நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அனல் காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் பயணம் செய்தவர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். துணியால் தலை, முகப்பகுதியை மூடிக்கொண்டு வாகனங்களில் பயணம் செய்தனர். சாலையில் நடந்து சென்ற பெண்கள் பலர் குடைபிடித்தபடி சென்றனர். வெயிலின் தாக்கத்தால் குளிர்பானங்கள், இளநீர், தர்பூசணி, நுங்கு, வெள்ளரிக்காய் ஆகியவற்றின் விற்பனை அதிக அளவில் நடந்தது. 

Next Story