கோவில்பட்டி பகுதியில் கூட்டுறவு சங்கங்களில் 246 பயனாளிகளுக்கு ரூ.2.28 கோடி கடன் உதவி அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
கோவில்பட்டி பகுதியில் கூட்டுறவு சங்கங்களில் 246 பயனாளிகளுக்கு ரூ.2.28 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி பகுதியில் கூட்டுறவு சங்கங்களில் 246 பயனாளிகளுக்கு ரூ.2.28 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.
நவீனமயமாக்கப்பட்ட கூட்டுறவு வங்கிகள் திறப்பு விழா
கோவில்பட்டி இனாம் மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி நவீனமயமாக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார். கூட்டுறவு சங்க தலைவர் மகேஷ்குமார் வரவேற்று பேசினார்.
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நவீனமயமாக்கப்பட்ட கூட்டுறவு வங்கியை திறந்து வைத்தார். பின்னர் அவர் 86 பயனாளிகளுக்கு ரூ.24 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு கடன் உதவிகளை வழங்கினார்.
முன்னதாக கோவில்பட்டி அருகே வானரமுட்டியில் நவீன மயமாக்கப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார். பின்னர் அவர், 11 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 160 பெண்களுக்கு ரூ.1 கோடியே 4 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, எம்.எல்.ஏ.க்கள் சண்முகநாதன், சின்னப்பன், தாசில்தார் மணிகண்டன், யூனியன் ஆணையாளர்கள் மாணிக்கவாசகம், சசிகுமார், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட பஞ்சாயத்து தலைவி சத்யா,
கூட்டுறவு துணை பதிவாளர் ஜெயசீலன், மண்டல இணை பதிவாளர் ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்க தலைவர்கள் அன்புராஜ், சுந்தர்ராஜன், ஒன்றிய கவுன்சிலர் கோட்டூர்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பொதுக்கூட்டம்
கோவில்பட்டி மார்க்கெட் ரோடு எம்.ஜி.ஆர். திடலில் நகர அ.தி.மு.க. சார்பில், ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட கவுன்சிலர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். நகர செயலாளர் விஜய பாண்டியன் முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ, தலைமை கழக பேச்சாளர் நடிகை விந்தியா ஆகியோர் பேசினர்.
ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் தங்க மாரியம்மாள், நகர துணை செயலாளர் வனரோஜா, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் யூனியன் துணை தலைவர் சுப்புராஜ், அரசு வக்கீல் முருகேசன், முன்னாள் நகரசபை துணை தலைவர்கள் ரத்தினவேல், ராமர், யூனியன் தலைவி கஸ்தூரி சுப்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். வார்டு செயலாளர் மாரிமுத்து நன்றி கூறினார்.
Related Tags :
Next Story