கிராம கோவில் பூசாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் மாநாட்டில் வலியுறுத்தல்
கிராம கோவில் பூசாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என நெல்லையில் நடந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
நெல்லை,
கிராம கோவில் பூசாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என நெல்லையில் நடந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
கிராம கோவில் பூசாரிகள் மாநாடு
கிராம கோவில் பூசாரிகள் பேரவையின் நெல்லை மாநகர மாநாடு நெல்லை டவுனில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று நடந்தது. இணை அமைப்பாளர் நாகராஜ் தலைமை தாங்கினார். மாநகர அமைப்பாளர் மாடசாமி, இணை அமைப்பாளர்கள் சரவணன், பரமசிவன் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை அமைப்பாளர் மாரியப்பன் வரவேற்று பேசினார். புத்தாத்மானந்தா சரசுவதி சுவாமிகள் அருளாசி வழங்கி பேசினார். விசுவ இந்து பரிஷத் மாநில தலைவர் ரெத்தினசாமி, கிராம கோவில் பூசாரிகள் பேரவை நிறுவனர் வேதாந்தம், மாநில அமைப்பாளர் சோமசுந்தரம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
ஊக்கத்தொகை
கிராம கோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் பெற ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.72 ஆயிரமாக உயர்த்த வேண்டும். கிராம கோவில் பூசாரிகளுக்கு மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
கடந்த 2001–ம் ஆண்டு பூசாரிகள் நல வாரியம் அமைக்கப்பட்டது. இதில் சுமார் 84 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு நல வாரிய சலுகைகள் வழங்கப்பட்டன. தற்போது நல வாரியம் செயல்படாமல் முடங்கி கிடக்கிறது. அந்த நல வாரியத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில், இணை அமைப்பாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.
மாநாட்டில் விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட தலைவர் ஆவுடையப்பன், மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், கோட்ட பொறுப்பாளர் மாரியப்பன், மாவட்ட பொறுப்பாளர் ரெங்கநாதன், மாவட்ட அமைப்பாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story