ஐஸ்கிரீம் வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறி பள்ளி வளாகத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை - 2 மாணவர்கள் கைது


ஐஸ்கிரீம் வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறி பள்ளி வளாகத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை - 2 மாணவர்கள் கைது
x
தினத்தந்தி 2 March 2020 3:30 AM IST (Updated: 2 March 2020 12:08 AM IST)
t-max-icont-min-icon

வானூர் அருகே ஐஸ்கிரீம் வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறி பள்ளி வளாகத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

வானூர்,

வானூர் அருகே கீழ்புத்துபட்டில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள இந்த பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி அங்கு உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று முன்தினம் வகுப்புகள் முடிந்த உடன் பள்ளி வளாகத்தில் விளையாடிக்கொண்டு இருந்தாள்.

அப்போது அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 2 பேர் அங்கு வந்தனர்.

அவர்கள் சிறுமியிடம் ஐஸ்கிரீம் வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறி பள்ளி வளாகத்தில் உள்ள மறைவான இடத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் 2 பேரும் சேர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

மாலையில் வீடு திரும்பிய சிறுமி சோர்வாக காணப்பட்டாள். இதனை பார்த்த பெற்றோர் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி அழுதவாறு நடந்தது குறித்து அவர்களிடம் தெரிவித்தாள். உடனே அவர்கள் இது குறித்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் படுகாயம் அடைந்த சிறுமி சிகிச்சைக்காக புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story