வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இடமாற்றம் - கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவு


வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இடமாற்றம் - கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவு
x
தினத்தந்தி 2 March 2020 4:15 AM IST (Updated: 2 March 2020 12:08 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரிகளை இடமாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகளை இடமாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய சந்திரா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பணியிடத்தில் இருந்த திருப்பதிராஜன் சாக் கோட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிவகங்கை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய நிர்மல்குமார் கண்ணங்குடி ஒன்றிய கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பணியிடத்தில் இருந்த அன்புச்செல்வி, அதே ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியமர்த்தப் பட்டார்.

கண்ணங்குடி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய ரமேஷ், மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டார் . ஏற்கனவே அந்த பணியிடத்தில் இருந்த சுந்தர மகாலிங்கம், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டார்.

சிங்கம்புணரி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த பத்மநாபன், அதே ஒன்றியத்தில் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டார். வட்டார வளர்ச்சி அலுவலர் இளவேணி, சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தின் விடுப்பு மற்றும் பயிற்சி வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று, சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய ஜெகநாதசுந்தரம், பதவி உயர்வு பெற்று திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்களை தவிர, சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு ஒன்றியங்களில் பணியாற்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் 14 பேரை வேறு இடங்களுக்கு மாற்றம் செய்தும், உதவியாளராக பணியாற்றிய 3 பேரை பதவி உயர்வில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணி நியமனம் செய்தும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Next Story