சேலத்தில் 2-வது நாளாக சோதனை: மேலும் 12 குடிநீர் ஆலைகளுக்கு ‘சீல்'
சேலத்தில் 2-வது நாளாக அதிகாரிகள் நடத்திய சோதனையில் மேலும் 12 குடிநீர் ஆலைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டன.
சேலம்,
அரசு அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை உறிஞ்சும் குடிநீர் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி அதிகாரிகள் தமிழகம் முழுவதும் சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதையடுத்து சேலம் மாவட்டத்தில் அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இதில் அனுமதியின்றி இயங்கிய 15 குடிநீர் ஆலைகளுக்கு ‘சீல்’ வைத்தனர்.
இதைத்தொடர்ந்து சேலம் மாநகர் பகுதியில் 2-வது நாளாக நேற்று சோதனை நடைபெற்றது. அதன்படி சேலம் உதவி கலெக்டர் மாறன் தலைமையில் தாசில்தார்கள் மற்றும் அதிகாரிகள் மாமாங்கம், சோளம்பள்ளம், எருமாபாளையம், நிலவாரப்பட்டி, பெரியபுதூர், அம்மாபேட்டை, வலசையூர், குரங்குச்சாவடி ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தினர்.
12 ஆலைகளுக்கு ‘சீல்’
இந்த சோதனையில் 12 குடிநீர் ஆலைகள் அனுமதியின்றி செயல்பட்டது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அனுமதியின்றி இயங்கிய 12 குடிநீர் ஆலைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
இது குறித்து அதிகாரி களிடம் கேட்ட போது, மாவட்டத்தில் இன்னும் பல ஆலைகள் அனுமதியின்றி செயல்படுவதாக புகார் வந்து உள்ளது. எனவே தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

Related Tags :
Next Story