திருப்பரங்குன்றம் அருகே, முஸ்லிம்கள் போராட்டம்
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தர்ணா போராட்டம் நடந்தது.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் அருகே உள்ள விளாச்சேரி மெயின் ரோட்டில் விளாச்சேரி முஸ்லிம் ஜமாத் மற்றும் பொதுமக்கள் சார்பில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு விளாச்சேரி முஸ்லிம் ஜமாத் தலைவர் புகர்தீன் செல்லையா தலைமை தாங்கினார். போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பால பாரதி, மதுரை புறநகர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் காளிதாஸ், காங்கிரஸ் கட்சி பேச்சாளர் பொன்மனோகரன், மதசார்பற்ற ஜனதா தளம் மாநில பொதுச் செயலாளர் ஜான் மோசஸ், நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மண்டல செயலாளர் செல்வகோமதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் கவிஞர் சென்ராயன், தி.மு.க. கிளை பொறுப்பாளர் ஜபருல்லா, வக்கீல் வாஞ்சிநாதன் உள்பட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டு பேசினார்கள்.
காலை 9 மணியில் இருந்து மாலை 6 மணி வரை நடைபெற்ற இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள், சிறுவர், சிறுமிகள் மற்றும் இஸ்லாமிய இளைஞர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் விளாச்சேரி முஸ்லிம் ஜமாத் முன்னாள் தலைவர் முஹம்மது சலீம் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story