மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம்: தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்


குழந்தைக்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. மோதிரம் வழங்கியபோது எடுத்த படம்.
x
குழந்தைக்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. மோதிரம் வழங்கியபோது எடுத்த படம்.
தினத்தந்தி 2 March 2020 4:19 PM IST (Updated: 2 March 2020 4:19 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரத்தை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

தங்க மோதிரம்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவனையில் தி.மு.க. நகர, ஒன்றியம் சார்பில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் ரத்ததானமுகாம் நடந்தது. ரத்ததானம் வழங்கிய தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., தலைமை மருத்துவர் பாபுஜியிடம், தி.மு.க. தலைவர் பிறந்த நாளையொட்டி இந்த மாதம் முழுவதும் ரத்ததானம் வழங்கப்படும் என்றார்.

மேலும் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நேற்று பிறந்த 6 குழந்தைகளுக்கு அவர் தங்கமோதிரம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், மணிகண்ட ராஜா, நகர துணை செயலாளர் சரவணன், அவைத்தலைவர் பதிவு ஜமால், பேரூர் செயலாளர் இளங்கோவன், சிங்கப்புலி அண்ணாவி, மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி, ஒன்றிய கவுன்சிலர்கள் அண்ணாமலை, ஈஸ்வரன், வள்ளி மயில் ராஜா, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வெம்பக்கோட்டை
வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ஒன்றிய பொறுப்பாளர் ஜெயபாண்டி தாயில்பட்டி , எதிர்கோட்டை, வலையபட்டி, முத்துசாமிபுரம், ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் கட்சி கொடிஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கிபேசினார்.

வெம்பக்கோட்டையில் உள்ள சிபியோ ஆதரவற்றோர் பள்ளியில் அன்னதானமும் வழங்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர்கள் எதிர் கோட்டை சுப்புராஜ், தாயில்பட்டி சந்தானம், பொறுப்புக் குழு உறுப்பினர்கள் பொன்ராஜ், திருப்பதி, பொன்னழகு, எங்கம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை, கணஞ்சாம்பட்டி, தேவர் நகர், பழைய ஏழாயிரம்பண்ணை ஆகிய பகுதியில் கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டன. ஊராட்சி செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி கணேசன், இளைஞரணி அமைப்பாளர் ஜேம்ஸ் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story