மனை பிரிவு அனுமதியில் முறைகேடு: ஓய்வுபெறும் நாளில் வட்டார வளர்ச்சி அதிகாரி பணி இடைநீக்கம்


மனை பிரிவு அனுமதியில் முறைகேடு: ஓய்வுபெறும் நாளில் வட்டார வளர்ச்சி அதிகாரி பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 3 March 2020 4:00 AM IST (Updated: 2 March 2020 10:34 PM IST)
t-max-icont-min-icon

மனை பிரிவுகளில் முறைகேடு செய்ததாக டி.கல்லுப்பட்டி வட்டார வளர்ச்சி அதிகாரி ஓய்வு பெறும் நாளில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

மதுரை,

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள புல்கட்டை ஊராட்சியில் மனை பிரிவு பெறுவதற்கு முறைகேடாக அனுமதி வழங்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சம்பந்தப்பட்ட ஊராட்சியில் மனை பிரிவு அனுமதி குறித்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.விசாரணையில் மனை பிரிவு அனுமதியில் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து சென்னையில் உள்ள ஊரக உள்ளாட்சி துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இது குறித்த விசாரணைக்கு பின்னர் டி.கல்லுப்பட்டி வட்டார வளர்ச்சி அதிகாாி கலைச்செல்வனை, ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவு வழங்கப்பட்டது.

இதற்கிடையே பணி ஓய்வுபெறும் நாளில் வட்டார வளர்ச்சி அதிகாாி கலைச்செல்வன் தனது நண்பர்களுக்கு டி.கல்லுபட்டியில் உள்ள மண்டபம் ஒன்றில் விருந்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.

Next Story