விபத்தில் மூளைச்சாவு அடைந்த தமிழ்ப்பல்கலைக்கழக பெண் விரிவுரையாளரின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானம்
தஞ்சையில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த தமிழ்ப்பல்கலைக்கழக ெபண் விரிவுரையாளரின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது. கல்லீரல் மதுரைக்கும், இதயம் சென்னைக்கும் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.
தஞ்சாவூர்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தை சேர்ந்தவர் இளங்கோ. இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி உமா. செவிலியர். இவர்களுடைய மகள் கனிமொழி(வயது 25). கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தொல்பொருள் ஆய்வு நிறைஞரான கனிமொழி, கடந்த ஜூன் மாதம் முதல் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி வந்தார்.
இவர், கடந்த மாதம் 27-ந் தேதி தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார், கனிமொழி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார்.
மூளைச்சாவு
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தஞ்சை மீனாட்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் அவர் மூளைச்சாவு அடைந்தார். இதை டாக்டர்கள் உறுதி செய்த பின், மூளைச்சாவு அடைந்த தகவலை கனிமொழியின் பெற்றோரிடம் தெரிவித்தனர். அவர்கள், தங்கள் மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். தங்களது விருப்பத்தை டாக்டர்களிடம் அவர்கள் தெரிவித்தனர்.
ஒரு சிறுநீரகம் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், இதயம் மற்றும் நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கண்கள் தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனைக்கும் என 7 பேருக்கு தானமாக அளிக்க முடிவு செய்யப்பட்டது.
40 நிமிடங்களில்...
இதையடுத்து டாக்டர்கள் அடங்கிய குழுவினர் நேற்று கனிமொழியின் உடலில் இருந்து சிறுநீரகம், கல்லீரல், இதயம், நுரையீரல், ஆகியவற்றை அறுவை சிகிச்சை மூலம் தனித்தனியாக எடுத்துக்கொண்டு 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் திருச்சிக்கு புறப்பட்டனர். பிற்பகல் 3 மணிக்கு தஞ்சையில் இருந்து புறப்பட்ட இந்த 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 40 நிமிடங்களில் பிற்பகல் 3.40 மணிக்கு திருச்சியை சென்றடைந்து ஒரு ஆம்புலன்ஸ் விமான நிலையத்துக்கும், மற்றொரு ஆம்புலன்ஸ் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் சென்றது.
விமான நிலையத்துக்கு சென்ற ஆம்புலன்சில் இருந்து கல்லீரல், இதயம், நுரையீரல் ஆகியவற்றை மதுரை, சென்னைக்கு விமானத்தில் அனுப்பி வைத்தனர். கண்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
7 பேருக்கு மறுவாழ்வு
இது குறித்து கனிமொழியின் அண்ணன் சதீஸ்குமார் கூறும்போது, சாலை விபத்தில் காயம் அடைந்த எனது தங்கையை எவ்வளவோ போராடி பார்த்தும் காப்பாற்ற முடியவில்லை. உதவும் மனம் படைத்த என் தங்கையின் உடல் உறுப்புகள் அடுத்தவருக்கு உதவிட வேண்டும் என நினைத்து நாங்கள் தானம் கொடுத்துள்ளோம். என் தங்கையின் உடல் உறுப்புகள் மூலம் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது என்றார்.

Related Tags :
Next Story