திருவாரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 12 ஆயிரத்து 801 மாணவ-மாணவிகள் எழுதினர்


திருவாரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 12 ஆயிரத்து 801 மாணவ-மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 3 March 2020 4:00 AM IST (Updated: 3 March 2020 12:42 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 12 ஆயிரத்து 801 மாணவ-மாணவிகள் எழுதினர்.

திருவாரூர்,

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 26-ந் தேதி வரை நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் 120 பள்ளிகளை சார்ந்த 13 ஆயிரத்து 479 மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இதற்காக தேர்வு 53 மையங்களில் நடைபெற்றது. இதில் 12 ஆயிரத்து 801 மாணவ-மாணவிகள தேர்வு எழுதினர். 678 பேர் தேர்வு எழுதவரவில்லை.

தேர்வு மையங்களை கண்காணிக்க முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் 5 ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

10 பறக்கும் படை

தேர்வு மையங்களில் 74 நிலையான படையினர் மற்றும் 10 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள 6 வினாத்தாள் மையங்களில் இருந்து 16 வழித்தட அலுவலர்கள் மூலம் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் எடுத்து வரப்பட்டன.

தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள் கட்டுகளை அதே 16 வழித்தட அலுவலர்கள் மூலம் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்புடன் விடைத்தாள் சேகரிப்பு மையங்களான திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப்பள்ளியிலும, மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியிலும் தொடர்பு அலுவலர்கள் மூலம் பெற்று விடைத்தாள்களை பாதுகாப்பாக வைத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 62 மாற்றுத் திறனாளி மாணவர்கள் சிறப்பு சலுகைகள் பெற்று தேர்வு எழுதினர்.

Next Story