குடும்ப தகராறில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை கதறி அழுத குழந்தையால் சோகத்தில் மூழ்கிய கிராமம்


குடும்ப தகராறில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை கதறி அழுத குழந்தையால் சோகத்தில் மூழ்கிய கிராமம்
x
தினத்தந்தி 3 March 2020 4:30 AM IST (Updated: 3 March 2020 1:29 AM IST)
t-max-icont-min-icon

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது தாயின் உடலை பார்த்து கதறி அழுத குழந்தையால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

தா.பழூர்,

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள தேவமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் தர்மேந்திரன். இவரது மனைவி சுகன்யா(வயது 27). இவர்களுக்கு பவ்யா(4), கிரண்யா(4 மாதம்) என 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்று முன்தினம் இரவு சுகன்யா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் தனது தாயின் உடலை பார்த்து பவ்யா கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க செய்தது. இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. இதில் அதிர்ச்சி அடைந்த சுகன்யாவின் தந்தை ஆறுமுகம் தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக கூறி தா.பழூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சுகன்யாவிற்கு திருமணம் ஆகி 4 வருடங்களே ஆவதால் வருவாய் கோட்டாட்சியர் பூங்கோதை இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story