வங்கியில் பணம் எடுக்கும் முதியவர்கள் கவனமாக செயல்பட வேண்டும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
குற்றச்செயல்களை பொதுமக்கள் எப்படி தடுக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு பிரசார கூட்டம் நந்திவரத்தில் உள்ள பத்மாவதி நகர் பூங்காவில் நடைபெற்றது.
வண்டலூர்,
கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையம் சார்பில் குற்றச்செயல்களை பொதுமக்கள் எப்படி தடுக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு பிரசார கூட்டம் நந்திவரத்தில் உள்ள பத்மாவதி நகர் பூங்காவில் நடைபெற்றது. விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.கண்ணன் தலைமை தாங்கி பொதுமக்களிடையே பேசினார். அவர் கூறியதாவது:-
வங்கிகளுக்கு சென்று பணம் எடுத்து வரும் முதியவர்கள் கவனமாக இருக்க வேண்டும், நீங்கள் மோட்டார் சைக்கிளில் வரும் போது, சாலையில் 10 அல்லது 20 ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்தால், அதனை எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளை நிறுத்த வேண்டாம். அவ்வாறு நிறுத்தினால் உங்களை திசைதிருப்பிவிட்டு திருடர்கள் மோட்டார் சைக்கிளில் வைத்திருக்கும் பணத்தை திருடிவிடுவார்கள். எனவே இது போன்ற நேரங்களில் உங்களை யாராவது பின்தொடர்ந்து வந்தால் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
பெற்றோர்கள், சிறுவர்கள், சிறுமிகளின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும், முன்பின் தெரியாத நபர்களிடம் குழந்தைகள் பழகுவதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும், பொதுமக்கள் வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் போது அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும், மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்கள், ஆண்கள் இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும். ‘காவலன்’ செல்போன் செயலியை பெண்கள் அனைவரும் தங்களது செல்போனில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அதன் பின்னர் அவர் பத்மாவதி நகர் பூங்காவில் மரக்கன்றுகளை நட்டார். இதனையடுத்து நந்திரவம் கிராமத்தில் ஸ்ரீவள்ளி நகர் பிரதான சாலையில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், பெருமாட்டுநல்லூர் கூட்ரோடு பகுதியில் புதியதாக அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை திறந்து வைத்தார்.
இதில் வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.பாரதன், ஜி.மாசிலாமணி, பி.பவானந்தம், ஆர்.கண்ணன், பெருமாட்டுநல்லூர் பகவதி நாகரத்தினம் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Related Tags :
Next Story