அரசின் சேவைகள் வீடு தேடி வரும் ‘ஜன சேவக்’ திட்டம் மாநிலம் முழுவதும் விஸ்தரிப்பு சட்டசபையில் எடியூரப்பா தகவல்
அரசின் சேவைகள் வீடு தேடி வரும் ‘ஜன சேவக்’ திட்டம் மாநிலம் முழுவதும் விஸ்தரிக்கப்படும் என்று சட்டசபையில் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்-மந்திரி எடியூரப்பா பதிலளித்து பேசும்போது கூறியதாவது:-
கர்நாடகத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தொழில்களின் வளர்ச்சி குறைந்துள்ளது. இவற்றை சரிசெய்ய எங்கள் அரசு திடமான முடிவை எடுத்துள்ளது. சமீபத்தில் தாவோசில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று, தொழில் முதலீட்டாளர்களை சந்தித்தேன். அப்ேபாது கர்நாடகத்தில் தொழில் தொடங்க வருமாறு அவர் களுக்கு அழைப்பு விடுத்தேன். சில நாட்களுக்கு முன்பு உப்பள்ளியில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.70 ஆயிரம் கோடிக்கு தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளன.
யாதகிரி மாவட்டத்தில் உள்ள கடேசூர் தொழில் பூங்கா, வரும் நாட்களில் மிகப்பெரிய பூங்காவாக மாறும். இதன் மூலம் வேலை வாய்ப்புகள் பெருகும். ேமலும் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். ஐதராபாத்-கர்நாடகம், கல்யாண-கர்நாடகம் என்று பெயர் மாற்றம் செய்துள்ளோம். இது வெறும் பெயர் மாற்றம் மட்டும் கிடையாது. அந்த பகுதிக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் சாசன சிறப்பு சலுகை மூலம், அந்த பகுதி மேலும் வளர்ச்சி பெறும்.
பீதர், கலபுரகியில் விமான நிலையம் அமைக்கப்பட்டு, விமான சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இது கர்நாடகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். இதனால் கல்யாண-கர்நாடகம் பகுதியில் முதலீடு செய்ய தொழில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுவார்கள். பெங்களூரு புறநகர் ரெயில் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இது வாகன நெரிசல் மற்றும் மக்கள் நெரிசலை குறைக்க உதவும். ரூ.18 ஆயிரத்து 900 கோடி செலவில் அமல்படுத்தப்படும் இந்த திட்டத்திற்கு மத்திய-மாநில அரசுகள் தலா 20 சதவீதம் நிதி வழங்கும். மீதமுள்ள நிதி முதலீட்டாளர்கள் மூலம் திரட்டப்படும்.
பெங்களூருவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ள அரசு நிலத்தை மீட்கவும், அரசு நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை தடுக்கவும் கே.ஜி.போப்பையா எம்.எல்.ஏ. தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் சேவைகள் வீடு ேதடி வரும் ‘ஜன சேவக்’ திட்டம் பெங்களூரு டி.தாசரஹள்ளி தொகுதியில் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் ராஜாஜிநகர், மகாதேவபுரா, பொம்மனஹள்ளி ஆகிய 3 ெதாகுதிகளுக்கு விஸ்தரிக்கப்பட்டு உள்ளது. அடுத்து வரும் நாட்களில் இந்த திட்டம் கர்நாடகம் முழுவதும் விஸ்தரிக்கப்படும். இந்த திட்டத்தில் 53 சேவைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
மாநில எல்லை (பெலகாவி) விஷயத்தில் மராட்டியம் அடிக்கடி பிரச்சினை எழுப்புகிறது. இந்த விவகாரத்தில் மகாஜன் அறிக்கையே இறுதியானது. கர்நாடகத்தின் ஒரு அங்குலம் நிலம் கூட விட்டுக்கொடுக்க மாட்டோம். பெலகாவியில் உள்ள சுவர்ண சவுதாவை முழுமையாக பயன்படுத்தும் நோக்கத்தில் அந்த கட்டிடத்திற்கு 5, 6 துறைகளை இடம் மாற்ற முடிவு செய்துள்ளோம். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Related Tags :
Next Story