தென்காசியில் நாளை மறுநாள் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தகவல்
தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
தென்காசி,
தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது என மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
குறைதீர்க்கும் கூட்டம்
தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தென்காசி சுபம் திருமண மண்டபத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.
கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, மூன்று சக்கர வண்டி, சக்கர நாற்காலி, காலிப்பர், ஊன்றுகோல், சிறப்பு சக்கர நாற்காலி, காதொலி கருவி, மடிக்கணினி, பார்வையற்றோர்களுக்கு கருப்பு கண்ணாடி, மடக்கு ஊன்றுகோல், ப்ரெய்லி கைக்கெடிகாரம், வீடியோ உருப்பெருக்கி, செயற்கை கால் மற்றும் செயற்கை கை, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரம்,
உதவி தொகை
திருமண நிதி உதவி, கல்வி உதவி தொகை, சுயவேலைவாய்ப்பு வங்கி கடன், பஸ் பயண சலுகைகள், பராமரிப்பு உதவி தொகை, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம், தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான உதவி, தொழிற்பயிற்சி மையம், மீட்பு திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி தொகை மற்றும் இதர கோரிக்கை தொடர்பாக மனு அளித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story