தூத்துக்குடி மாவட்ட போலீஸ் துறை சார்பில் சாலை பாதுகாப்பு இணையதளம் தொடக்கம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்


தூத்துக்குடி மாவட்ட போலீஸ் துறை சார்பில் சாலை பாதுகாப்பு இணையதளம் தொடக்கம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 3 March 2020 10:30 PM GMT (Updated: 3 March 2020 4:22 PM GMT)

தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு குறித்த இணையதளத்தை கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு குறித்த இணையதளத்தை கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.

இணையதளம் 

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் துறை சார்பில் தூத்துக்குடி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்த இணையதளம் தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்பாலகோபாலன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை நிர்மலா, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு safetuty.org என்ற இணையதளத்தை தொடங்கி வைத்தார்.

சாலை பாதுகாப்பு 

இந்த இணையதளத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் எவ்வாறு விபத்துக்களை தவிர்ப்பது, இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் நீண்ட தூரம் பயணிக்கும்போதும், இரவில் பயணிக்கும்போதும் மற்றும் குறுகலான பாதைகளில் வாகனம் ஓட்டும்போது பின்பற்றவேண்டியவைகள் குறித்தும், பாதுகாப்பான முறையில் பாதசாரிகள் சாலையில் எந்த பக்கம் நடக்க வேண்டும், பாதசாரிகளுக்கு ஏற்படும் இடையூறுகள், பாதசாரிகளுக்கான ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம்பெற்று உள்ளன.

நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார், பள்ளி மாணவிகள், போலீசார் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story