13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது


13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 4 March 2020 4:00 AM IST (Updated: 3 March 2020 10:58 PM IST)
t-max-icont-min-icon

பாரிமுனையில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டார்.

பெரம்பூர்,

சென்னை பாரிமுனை அடுத்த மண்ண்டி கிளை பேட்டரி கார்ப்பரேஷன் குடியிருப்பை சேர்ந்தவர் மனோகரன் (வயது 45). இவர் ஆட்டோ டிரைவர். இந்த நிலையில் அவர், அப்பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறினாள்.

இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் மனோகரனை தேடிச்சென்று சரமாரியாக அடித்து தாக்கினர்.

இது குறித்து வடக்கு கடற்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, தாக்கியதால் காயமடைந்த மனோகரனை மீட்டு, சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மனோகரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், அவரை அனைத்து மகளிர் போலீசிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து சிறுமியை பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வடக்கு கடற்கரை மகளிர் போலீசார் மனோகரனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் ஆட்டோ டிரைவர் மனோகரனை தாக்கியதாக மனோகரன் கொடுத்த புகாரின் பேரில், அவரை தாக்கிய சிறுமியின் உறவினர்கள் மீது வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story