கல்வராயன்மலையில் சாராய ஊறல் அழிப்பு
கச்சிராயப்பாளையம் அருகே கல்வராயன் மலையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த சாராய ஊறலை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.
கச்சிராயப்பாளையம்,
கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர் சக்தி தலைமையிலான போலீசார் கச்சிராயப்பாளையம் அருகே கல்வராயன் மலையில் உள்ள கொடமாத்தி மாங்கனி ஓடைப்பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சாராய வியாபாரி பதுக்கி வைத்திருந்த 6 பேரல் சாராய ஊறலை போலீசார் கண்டுபிடித்து தரையில் கொட்டி அழித்தனர். இதில் 1,200 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது. இதுதொடர்பாக கொடமாத்தியை சேர்ந்த ஏழுமலை என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
இதேபோல் கச்சிராயப்பாளையம் இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையிலான போலீசார் கிணத்தூர் ஓடைப்பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். இதில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை கண்டு பிடித்து அழித்தனர். இது தொடர்பாக கிணத்தூரை சேர்ந்த வெங்கடேசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story