47 ஆலைகளுக்கு சீல்; வேலைநிறுத்த போராட்டம்: கோவையில் கேன் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி


தண்ணீர் பிடிக்க இருசக்கர வாகனத்தில் கேன்களுடனும், தள்ளுவண்டியில் குடங்களுடன் செல்பவர்களை படத்தில் காணலாம்.
x
தண்ணீர் பிடிக்க இருசக்கர வாகனத்தில் கேன்களுடனும், தள்ளுவண்டியில் குடங்களுடன் செல்பவர்களை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 4 March 2020 12:50 PM IST (Updated: 4 March 2020 12:50 PM IST)
t-max-icont-min-icon

47 ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ள நிலையில், வேலை நிறுத்த போராட்டமும் நடைபெறுவதால் கோவையில் கேன் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

குடிநீர் ஆலைகளுக்கு சீல்
கோவை மாவட்டத்தில் விதிமுறைகளை பின்பற்றாத மற்றும் அனுமதி பெறாத 41 கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு நேற்று முன்தினமும், நேற்று 6 குடிநீர் ஆலைகளுக்கும் என மொத்தம் 47 ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் கேன் குடிநீர் உற்பத்தி ஆலை உரிமையாளர்கள் கடந்த 6 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கோவையில் கேன் குடிநீர் விற்பனை செய்யப்பட வில்லை. இதனால் கேன் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக கோவையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் பெரும்பாலும் உப்பு தண்ணீர் இணைப்பு மட்டுமே உள்ளது. இதனால் அங்கு வசிப்ப வர்கள் கேன் குடிநீரையே நம்பி உள்ளனர்.

அடுக்குமாடி குடியிருப்புவாசிகள்
தற்போது கேன் குடிநீர் உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத் தில் ஈடுபட்டு உள்ளதால் சமையல் செய்ய மட்டுமின்றி குடிக்க கூட தண்ணீர் கிடைக்காமல் கஷ்டப்படுவதாக தெலுங்குபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புதாரர்கள் தெரிவித்தனர்.

குடிநீர் தட்டுப்பாடு குறித்து இல்லத்தரசிகள் கூறியதாவது:-
போன் செய்தால் கேன் குடிநீர் உடனே கிடைக்கும் என்ற நிலை இருந் தது. ஆனால் தற்போது கேன் குடிநீர் கிடைப்பது இல்லை. அடிக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் பொதுக்குழாய் இல்லை. இதனால் எங்கு தண்ணீர் கிடைக்கும் என்று தெரியாமல் தவித்து வருகிறோம். கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் கேன் குடிநீர் கிடைக்க விட்டால் எப்படி சமாளிக்க போகிறோம் என தெரியவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கூடுதல் விலைக்கும் கிடைப்பது இல்லை

கேன் குடிநீர் வினியோகிப்பவர்கள் கூறிய தாவது:-

கேன் குடிநீர் ஆலைகளுக்கு சீல் மற்றும் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக கேன் குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது. திருமணம் உள்பட விஷேசங்களுக்கு எடுக்கப்பட்ட குடிநீர் ஆர்டர்களை கூட கொடுக்க முடிய வில்லை. 20 லிட்டர் குடிநீர் கேன் 30 ரூபாய்க்கு விற்றது. தற்போது கூடுதல் விலை கொடுத்தாலும் தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது.

இது போல் தனியார் நிறுவனங்கள், ஐ.டி. நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தண்ணீர் கேட்டு அடிக்கடி செல்போனில் அழைப்பார்கள். தற்போது அதிக எண்ணிக்கையில் அழைப்புகள் வருவதால் பதில் சொல்ல முடியாமல் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து வைத்து உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அலைந்து திரிகின்றனர்
அத்தியாவசிய தேவையான குடிநீர் கிடைக்காததால் பொதுக்குழாய் உள்ள இடங்களில் தண்ணீர் பிடிக்க மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் மக்கள் அலைந்து திரிகின்றனர். ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதியில் உள்ள பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்க எதிர்ப்பு உள்ளது. இதனால் தண்ணீர் தேவையை எப்படி பூர்த்தி செய்வது என்று தெரியாமல் பொதுமக்கள் கவலை அடைந்து உள்ளனர்.

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண கோவை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story