நெல்லை மாவட்டத்தில் பிளஸ்–1 தேர்வு தொடங்கியது 22,747 மாணவ–மாணவிகள் எழுதினர்


நெல்லை மாவட்டத்தில்  பிளஸ்–1 தேர்வு தொடங்கியது  22,747 மாணவ–மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 4 March 2020 5:27 PM IST (Updated: 4 March 2020 5:27 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் பிளஸ்–1 தேர்வு நேற்று தொடங்கியது. இதில் 22 ஆயிரத்து 747 மாணவ–மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள்.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் பிளஸ்–1 தேர்வு நேற்று தொடங்கியது. இதில் 22 ஆயிரத்து 747 மாணவ–மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள்.

பிளஸ்–1 தேர்வு 

தமிழகத்தில் பிளஸ்–1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. தேர்வு காலை 10 மணி தொடங்கி பிற்பகல் 1.15 மணிக்கு முடிவடைந்தது. நேற்று தமிழ் மொழிப்பாடத்துக்காக தேர்வு நடந்தது.

நெல்லை மாவட்டத்தில் நெல்லை, சேரன்மாதேவி, வள்ளியூர் என 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. நெல்லை கல்வி மாவட்டத்தில் 10 ஆயிரத்து 3 பேரும், சேரன்மாதேவி கல்வி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 301 பேரும், வள்ளியூர் கல்வி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 443 பேரும் தேர்வு எழுதினர். மொத்தம் 22 ஆயிரத்து 747 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

80 தேர்வு மையங்கள் 

80 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. இந்த தேர்வு மையங்களில் 152 மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதினார்கள். ஒரு மாற்றுத்திறாளிகளுக்கு ஒரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் கூறும் பதிலை ஆசிரியர்கள் எழுதினார்கள். காலை 9 மணிக்கு மாணவ–மாணவிகள் வந்தனர். சில பள்ளிக்கூடங்களில் கூட்டு பிரார்த்தனை நடத்தது.

தேர்வை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. அவர்கள் ஒவ்வொரு அறையாக சென்று தேர்வை கண்காணித்தனர்.

நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி, பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் பள்ளியில் ஆய்வு செய்தார். அவர் ஒவ்வொரு அறையாக சென்று தேர்வை கண்காணித்தனார். தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்வு முடிந்ததும் வினாத்தாள்களை ஆசிரியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு சென்றனர்.

Next Story