திருச்செந்தூர் அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை கணவர் இறந்த துக்கத்தில் சோக முடிவு
திருச்செந்தூர் அருகே கணவர் இறந்த துக்கத்தில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் அருகே கணவர் இறந்த துக்கத்தில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கணவர் இறந்த துக்கத்தில்...
திருச்செந்தூரை அடுத்த வீரபாண்டியன்பட்டினம் சண்முகநகர் காந்தி நகரைச் சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மனைவி அற்புதம் (வயது 77). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
சக்திவேல்–அற்புதம் தம்பதியின் மூத்த மகன் உதயகுமார் பெற்றோரை பராமரித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சக்திவேல் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். கணவர் இறந்த துக்கத்தில் அற்புதம் மனமுடைந்த நிலையில் இருந்தார்.
தீக்குளித்து தற்கொலை
இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அற்புதம் திடீரென்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, அவரை காப்பாற்றி சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறிதுநேரத்தில் அற்புதம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில், திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்செந்தூர் அருகே கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story