கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தை காங்கிரசார் முற்றுகையிட்டு போராட்டம்
வட்டார போக்குவரத்து அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் வாகன பரிசோதனை நிலையம் மீண்டும் செயல்பட வலியுறுத்தி நேற்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
வட்டார போக்குவரத்து அலுவலகம் முற்றுகை
கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தை நகர காங்கிரஸ் தலைவர் சண்முகராஜ் தலைமையில், மாவட்ட செயலாளர் முத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்திக் காமராஜ் உள்ளிட்டவர்கள் நேற்று முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள், வட்டார போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர் கண்ணையாவிடம் கோரிக்கை மனு வழங்கினர். அந்த மனுவில், கோவில்பட்டியில் உள்ள வாகன புகை பரிசோதனை நிலையம் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக செயல்படவில்லை. இதனால் வாகனங்களின் புகை பரிசோதனை சான்றிதழ் பெறுவதற்காக நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே கோவில்பட்டியில் வாகன புகை பரிசோதனை நிலையம் மீண்டும் செயல்பட வேண்டும்.
ஏர் ஹாரன் பறிமுதல் செய்ய...
மேலும் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் பொதுமக்களை மிரள வைக்கும் வகையில், பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் வகையில் பொருத்தப்பட்ட ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்ய வேண்டும்.
சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்வதை தடுக்க வேண்டும். இல்லையெனில் வருகிற 13–ந்தேதி கோவில்பட்டி வட்டார போக்குரத்து அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story