தூத்துக்குடியில் மகளிர் தின விழிப்புணர்வு பேரணி கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் மகளிர் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று மாலை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் மகளிர் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று மாலை தொடங்கி வைத்தார்.
பேரணி
தூத்துக்குடி மாவட்ட சமூகநலத்துறை சார்பில் மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை எதிர்த்து, மகளிர் தின விழிப்புணர்வு பெருமித நடை பேரணி நடந்தது. பேரணிக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன்பு இருந்து தொடங்கிய பேரணி குரூஸ் பர்னாந்து சிலை வரை நடந்தது.
பேரணியில் காமராஜ் கல்லூரி, பிஷப் கால்டுவெல் கல்லூரி மாணவிகள், கிராம உதயம் இயக்க பெண்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பேரணியாக சென்றனர்.
விழிப்புணர்வு
அப்போது, பெண்கள் பொது இடங்களில் எந்தவித நிபந்தனையும் இன்றி தங்களது அடிப்படை உரிமைகளை பயன்படுத்த வழக்காடுதல், பொது இடங்களில் பெண்களை பாதிக்கும் வழிமுறைகளை நெறிப்படுத்துதல், பொது இடங்களில் பெண்கள் மற்றும் நலிவுற்றோரை பற்றிய தவறான சிந்தனையை மாற்றுதல், இரவு நேரங்களில் சாலைகளில் பெண்களின் பாதுகாப்பு குறித்து பிரபலப்படுத்துதல், சமுதாயத்தில் பெண்கள் பாதிக்கப்படும் போது அவர்களை பாதிக்கப்பட்ட சிந்தனையில் இருந்து மீட்டெடுத்து பாதுகாப்பு கொடுத்தல் போன்றவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கலந்து கொண்டவர்கள்
பேரணியில் மாவட்ட சமூக நல அலுவலர்(பொறுப்பு) தனலட்சுமி, கிராம உதயம் மேலாளர் வேல்முருகன், காமராஜ் கல்லூரி உதவி பேராசிரியர் ரமேஷ்கண்ணா, பிஷப் கால்டுவெல் கல்லூரி உதவி பேராசிரியை சையது அலி பாத்திமா, பாதுகாப்பு அலுவலர் செல்வ மெர்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story