அரக்கோணம் அருகே, ரெயிலில் அடிபட்டு பெண் பலி - போலீசார் விசாரணை
அரக்கோணம் அருகே ரெயிலில் அடிபட்டு பெண் பலினார். இதுக்குறித்து ரெயில்வே போலீசார் பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தினார்.
அரக்கோணம்,
அரக்கோணத்தை அடுத்த திருத்தணி ரெயில் நிலையம் அருகில் நேற்று சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். தகவலறிந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தினார்.
அதில் இறந்து கிடந்த பெண் திருத்தணியை சேர்ந்த திரிபுரசுந்தரி (வயது 40) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சாவு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story