காட்பாடி அருகே, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பணியிடை நீக்கம்


காட்பாடி அருகே, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 5 March 2020 3:30 AM IST (Updated: 5 March 2020 2:01 AM IST)
t-max-icont-min-icon

காட்பாடி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

வேலூர்,

வேலூரை அடுத்த காட்பாடி அருகே உள்ள கசம் பகுதியில் அரசு நிதிஉதவி பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுரேஷ்பாபு என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் மாணவி ஒருவரை தனியாக அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி சகமாணவிகள், தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சம்பந்தப்பட்ட மாணவியை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்துள்ளனர். மேலும் ஆசிரியரின் செயல்பாடுகள் குறித்து பள்ளியை நடத்திவரும் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.

பெற்றோர் தெரிவித்த புகார் குறித்து பள்ளி நிர்வாகம், சம்பந்தப்பட்ட ஆசிரியரின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தியது. பின்னர் மாணவிக்கு பாலியல்தொல்லை கொடுத்த ஆசிரியர் சுரேஷ்பாபுவை பணியிடை நீக்கம்செய்து உத்தரவிட்டது.

மேலும் இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் நிஷாந்தினி மற்றும் சங்கீத் ஆகியோரின் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story