தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்


தாளவாடி அருகே   தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 6 March 2020 3:30 AM IST (Updated: 5 March 2020 9:27 PM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே வாழை தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்தன.

தாளவாடி, 

தாளவாடி அருகே உள்ள ராமாபுரம் மலைக்கிராமத்தை சேர்ந்தவர்கள் சுப்பிரமணி, துரைசாமி. 2 பேரும் விவசாயிகள். 2 பேரும் சேர்ந்து மொத்தம் 7 ஏக்கரில் வாழை பயிரிட்டு உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு யானைகள் கூட்டமாக வனப்பகுதியைவிட்டு வெளியேறி சுப்பிரமணி, துரைசாமி ஆகியோரின் தோட்டத்துக்குள் புகுந்தன. பின்னர் அந்த யானைகள் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழைகளை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தி விட்டு சென்றுவிட்டன.

இந்த நிலையில் நேற்று காலையில் தோட்டத்துக்கு வந்த சுப்பரமணியமும், துரைசாமியும் ஏராளமான வாழைகள் முறிந்து விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். யானைகள் புகுந்து அட்டகாசம் செய்ததில் 4 ஏக்கர் பரப்பளவிலான வாழைகள் சேதம் அடைந்திருந்தன.

Next Story