பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா 23-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது
பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா வருகிற 23-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.
சத்தியமங்கலம்,
சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகாவில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்குவார்கள். இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா வருகிற 23-ந் ேததி (திங்கட்கிழமை) பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.
குண்டம் விழா
இதைத்தொடர்ந்து 31-ந் தேதி இரவு கம்பம் சாட்டு விழா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 7-ந் தேதி நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். மேலும் ஏராளமான கால்நடைகளும் இந்த குண்டத்தில் இறங்கும். பின்னர் 8-ந் தேதி புஷ்ப ரதத்தில் அம்மன் வீதி உலாவும், 9-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. 10-ந் தேதி திருவிளக்கு பூஜையும், 13-ந் தேதி மறுபூஜையும் நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையாளர் (பொறுப்பு) வே.சபர்மதி, கோவில் ஊழியர்கள், பரம்பரை அறங்காவலர்கள் செய்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story