முஸ்லிம் கூட்டமைப்பு சார்பில் கோவை மாவட்டத்தில் இன்று கடையடைப்பு போராட்டம்
கோவை மாவட்டத்தில் முஸ்லிம் கூட்டமைப்பு சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை,
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கோவையில் முஸ்லிம் கூட்டமைப்பு சார்பில் ஆத்துப்பாலம் பகுதியில் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜா உசேன் தலைமையில் ஜமாத்துல் உலமாசபை, சுன்னத்ஜமாத் கொள்கை கூட்டமைப்பு, இந்திய தவ்ஹீத் ஜமாத், ஜாக், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த், த.மு.மு.க., எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரண்ட்ஆப் இந்தியா, மனிதநேய ஜனநாயக கட்சி, ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் உள்ளிட்ட பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் சுமித்சரணை சந்தித்து மனு கொடுத்தனர்.
பின்னர் ராஜாஉசேன் நிருபர்களிடம் கூறியதாவது:-
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாங்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் அதற்கு எதிராக காந்திபுரத்தில் இந்து முன்னணியினரும் மற்ற அமைப்பினரும் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். அந்த வழியாக சென்ற ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்டார்.
நேற்று முன்தினம் இரவு இந்துமுன்னணியை சேர்ந்த ஆனந்த் என்பவர் தாக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரை தாக்கியவர்கள் யார் என்றே இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் இந்துமுன்னணியினர் திரண்டு வந்து ஆட்டோ டிரைவர்களை தாக்கி, அடித்து நொறுக்கி உள்ள னர். ஆஸ்பத்திரிக்கு சென்ற பொதுமக்களையும் அச்சுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் கணபதியில் மசூதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது. கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல் பட்டு வருகிறார்கள். இது போன்ற சம்பவங்கள் முஸ்லிம் சமுதாயத்தின ரை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனரை சந்தித்து மனு கொடுத்துள்ளோம்.இந்து முன்னணியினரை கண்டித்து கோவை மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முஸ்லிம் கூட்டமைப்பு சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்துகிறோம். காலை 6 மணிமுதல் மாலை 6மணிவரை கடைகள் மூடப்பட்டு இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story