கல்லணைக்கால்வாய் ரூ.2,298 கோடியில் புனரமைப்பு: ஆசிய வங்கி குழுவினர் ஆய்வு
கல்லணைக்கால்வாய் ரூ.2 ஆயிரத்து 298 கோடியில் புனரமைக்கப்படுவதையொட்டி ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தஞ்சாவூர்,
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் பெரும்பகுதி கல்லணைக்கால்வாய் (புதுஆறு) பாசன பகுதிகளை உள்ளடக்கியதாகும். இந்த கல்லணைக்கால்வாய் தஞ்சை மாவட்ட எல்லையான கல்லணையில் இருந்து தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், பேராவூரணி, புதுக்கோட்டை வரை செல்கிறது.
இந்த கல்லணைக்கால்வாயை ரூ.2 ஆயிரத்து 298 கோடியே 75 லட்சம் மதிப்பில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மூலம் புனரமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஆசிய வங்கி குழுவினர் ஆய்வு
இதற்காக இந்த ஆண்டு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் கிளை வாய்க்கால்கள் மற்றும் ஏரிகள் நவீனப்படுத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆறு புனரமைக்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியை சேர்ந்த குழுவினர் தலைவர் ஹரிபாஸ்கர் தலைமையில் நேற்று ஆய்வு செய்தனர். உறுப்பினர்கள் ரூபா, வைத்தீஸ்வரன் ஆகியோரும் இடம் பெற்று இருந்தனர்.
இந்த குழுவினர் கல்லணைக்கால்வாய் தலைப்பு முதல் மகாராஜாசமுத்திரம் மற்றும் கல்யாணஓடை வாய்க்கால் வரை சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது கீழ்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன், கல்லணைக்கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் முருகேசன், உதவி செயற்பொறியாளர்கள் சண்முகவேல், அன்பரசன், உதவிப் பொறியாளர்கள் சுந்தர், அன்புச்செல்வன், சேந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story